Wednesday, May 21, 2014

வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?

ஜூன், 14ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: ஜூன், 14ல் நடக்கும் வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுக்கு, 9.95 லட்சம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். 2,342 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு, நடத்தப்பட உள்ளது. தேர்வெழுத, முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்திய தேர்வர்களின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை, பதிவு செய்து, தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்தில், பெயர் இல்லை எனில், பணம் செலுத்தியதற்கான, "செலான்' நகலுடன், பெயர், பதிவு எண், பணம் செலுத்திய இடம், முகவரி உள்ளிட்ட விவரங்களை, contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, வரும், 23ம் தேதிக்குள் (நாளை) அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment