Thursday, May 15, 2014

★★கிராம நிர்வாக அலுவலர் பணிகள்★★
★கிராம வருவாய் ஆவணமான புலப்படம், கிராமத்தின் நில உடைமையாளர் நபர் வரிசைச் சிட்டா, 'அ'பதிவேடு, பராமரித்தல்.
★நில வரி வசூலித்தல்.
ஆண்டு தோரும் பயிர்சாகுபடிக் கணக்கு (அடங்கல்) எழுதி அரசுக்கு புள்ளி விபரம் அனுப்புதல்.
★பிறப்பு, இறப்புப் பதிவேடு, பராமரித்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்தல். பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் வழங்குதல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்தல் போன்றவை..

No comments:

Post a Comment